
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரை இறுதி போட்டியில் இன்று இந்தியா ஆஸ்திரேலியா உடன் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸி அணி பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில் 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 264 ரன்கள் எடுத்தது. ஆஸி அணியில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 73 ரன்கள் வரை எடுத்தார். இந்திய அணியில் முகமது ஷமி 3 விக்கெட்டுகள் வரை வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 48.1 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 267 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயஸ் ஐயர் 45 ரன்களும், விராட் கோலி 84 ரன்களும் எடுத்தனர். தொடர்ச்சியாக 14 முறை ஆஸ்ரேலியாவிடம் இந்திய அணி தோல்வியை சந்தித்த நிலையில் இந்த முறை அந்த அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது இந்திய ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதன் மூலம் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.