இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகளுக்கு இடையேயான T20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி பார்படாஸ் மைதானத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலக கோப்பையை தட்டிச் சென்றது. இந்த வெற்றி மூலம் 17 வருடங்களுக்குப் பிறகு டி20 உலக கோப்பை வென்றுள்ளது இந்திய அணி. இதில் அதிகபட்சமாக விராட் கோலி 76 ரன்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில் வெற்றி பெற்றதை தொடர்ந்து நட்சத்திர வீரர் விராட் கோலி கண்ணீருடன் உணர்ச்சிவசப்பட்டு காணப்பட்டார். தொடர்ந்து, அவர் குடும்பத்தினருடன் செல்போனில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இறுதிப் போட்டியில் 76 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்த அவர், யாரும் எதிர்பாராத விதமாக திடீரென ஓய்வை அறிவித்து அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.