இந்திய கால்பந்து ஜாம்பவான் சுனில் சேத்ரி கடந்த வருடம் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். 40 வயதாகும் இவர் 2004 ஆம் ஆண்டு வருடம் முதல் கடந்த 20 வருடங்களாக இந்திய கால்பந்து அணியில் இடம் பெற்று பல சாதனைகளை செய்து வருகிறார். இந்திய அணியை உச்சத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று அயராது பாடுபட்டு வருகிறார். இன்று இந்தியாவில் கால்பந்து இந்தளவுக்கு பிரபலமாகியுள்ளது என்றால் அதற்கு இவர் தான் முக்கிய காரணம் என்று சொல்லலாம். கிட்டத்தட்ட 20 வருடங்கள் இந்திய அணிக்காக விளையாடி வந்த இவர் கடந்த வருடம் தான் ஓய்வு அறிவித்தார்.

ஆனால் சர்வதேசப் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறுவதாகும் உள்ளூர் மற்றும் கிளப் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என்றும் கூறியிருந்தார். அதன்படி ISL போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார். இந்த நிலையில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற சுனில் சௌத்ரி மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். 2027 ஆம் வருடம் நடைபெற இருக்கும் தகுதி சுற்று தொடங்க இருக்கிறது. ஏசியன் கப்பில் எப்படியாவது இந்தியா சாதிக்க வேண்டும் என்பதால் இந்திய கால்பந்து அணி நிர்வாகம் சுனில் சேத்ரியை அணுகி இந்த முடிவை எடுத்துள்ளார்கள்.