
நாயை நாய் என கூறிவிட்டால் குழந்தை என்கின்றனர். ஆனால் அது மற்றொரு குழந்தையை கடிப்பது நியாயமா என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பேசிய அவர், நாய்களை வளர்ப்பவர்கள் அதற்கு முறையான லைசன்ஸ் வாங்குவது கிடையாது. பாதுகாப்பற்ற முறையில் செல்லப்பிராணிகளை வெளியில் அழைத்துச் செல்லக்கூடாது என்பதை தெரிவித்தும் அதன் உரிமையாளர்கள் பின்பற்றுவது கிடையாது. செல்லப்பிராணிகளை வெளியே அழைத்துச் செல்லும்போது நாம் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.