நாய்களிடம் கடிப்படாமல் தப்பிப்பது குறித்து விலங்கு நல ஆர்வலர்கள் சில யோசனைகளை தெரிவித்துள்ளனர். அதனை தெரிந்து கொள்வோம். முதலில் நாய் துரத்தும் போது ஓடாதீர்கள், நாய் உங்களைப் பார்க்கும்போது அதன் கண்களை நேராக பார்க்காதீர்கள். நம்முடைய பலவீனத்தை புரிந்து கொண்டு உடனடியாக கடிக்கத் தொடங்கி விடும். நாய் உங்களை நெருங்கும் போது அச்சப்படாமல் நிமிர்ந்து நில்லுங்கள், நீங்கள் பயப்படவில்லை என்பதை உணர்ந்து விலகி விடும்.