கோவையைச் சேர்ந்த சரவணன் என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு பிறந்து 11 மாதமே ஆன ஆதிரா என்ற பெண் குழந்தை இருந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று குழந்தை நாற்காலியில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கீழே விழுந்துள்ளது . இதில் பலத்த காயம்படைந்த குழந்தையை பெற்றோர் கோவை தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அப்பொழுது குழந்தை மூளை சாவு அடைந்துள்ளது.

குழந்தை மூளைச்சாவு அடைந்த தகவலை கேட்டு பெற்றோர்களுக்கு கதறி அழுந்தனர். அவர்களை சமாதான படுத்திய மருத்துவர்கள் உடலுறுப்பு தானம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கி உள்ளனர். இதனை ஏற்று குழந்தையின் பெற்றோரும் குழந்தையின் உடல் உறுப்புகளை தானம் செய்யும் முன் வந்துள்ளனர். சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி சிகிச்சை பெற்று வரும் ஒரு வயது பெண் குழந்தைக்கு இதயம் தேவைப்படுவது தெரிய வந்தது . இதனைஅடுத்து அந்த குழந்தைக்கு கோவையை  சேர்ந்த ஆதிரா குழந்தையின் இதயம் ஆம்புலன்ஸ் மூலமாக கொண்டு செல்லப்பட்டு வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது.