கோயம்புத்தூர் மாவட்டம் வடவள்ளி அருகே ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இங்கு 800-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் பால்ராஜ் (30) என்பவர் நூலகப் பொறுப்பு ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் பள்ளியில் படிக்கும் 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். நாளுக்கு நாள் பாலியல் தொல்லை அதிகமாகவே மாணவி தன் பெற்றோரிடம் நடந்த விஷயங்களை கூறியுள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக பள்ளிக்கு சென்று புகார் கொடுத்தனர். உடனடியாக பால்ராஜ் பணி நீக்கம் செய்யப்பட்டார். இந்த தொடர்பாக மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் பள்ளிக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் 2 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் ஆர்.எஸ் புரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். மேலும் இந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பால்ராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.