பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, Get out Modi என்ற பதிவிட்டதற்கு திமுக ஐடி விங்கிற்கு நாளை காலை 6 மணி வரை கெடு விதித்துள்ளார். நீங்கள் Get out Modi என்று பதிவு போடுங்கள் நான் நாளை காலை 6 மணிக்கு என்னுடைய twitter பக்கத்தில் Get out Stalin என்று பதிவு போடுகிறேன்.

எதை மக்கள் வரவேற்கிறார்கள் என்று பார்த்து விடுவோம். நீங்கள் நாளை காலை 6:00 மணிக்கு பதிவிடும் ட்விட்டர் பதிவை விட என்னுடைய ட்விட்டர் பதிவு அதிக வரவேற்பை பெறுகிறதா இல்லையா என்று பார்த்து விடுவோம். மேலும் நாளை பாஜகவின் காலம் என்று கூறினார்.

அதோடு அண்ணாசாலைக்கு நாளை நான் தனியாக வருகிறேன். முடிந்தால் திமுகவின் மொத்த படையையும் வைத்து என்னை தடுத்து பாருங்கள் என்றும் உதயநிதி ஸ்டாலினுக்கு சவால் விடுத்துள்ளார். மேலும் கடந்த காலங்களில் உதயநிதி தரம் இல்லாத வார்த்தைகளை பேசியதால் அவருக்கும் தரம் இல்லாத பதில்கள் தான் வரும் என்று கூறிய அண்ணாமலை உங்க அப்பன் வீட்டு பணத்திலா காலை உணவு திட்டம் வழங்கப்படுகிறது என்றும் கூறினார்.