மிக்ஜாம் புயல் எதிரொலியாக நாளை சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டு, பள்ளி, கல்லூரி, தனியார் மற்றும் அரசு அலுவகங்களுக்கு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,  மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சி புரம் ஆகிய 4 மாவட்டங்களில் நாளை டாஸ்மாக் கடைகள் இயங்காது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், அறிவிப்பை மீறி டாஸ்மாக் கடைகளில் நாளை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், கடை பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் எச்சரித்துள்ளது