
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே வாலிபர் தனது காதலியை கொலை செய்து விபத்து போல சித்தரித்து நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுரை சேர்ந்தவர் விக்னேஸ்வரி. இவர் தீபன் என்ற வாலிபரை காதலித்துள்ளார்.
இவர்களுக்கு நாளை திருமணம் நடைபெற இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் காதலனுடன் விக்னேஸ்வரி இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுள்ளார். அதன் பிறகு படுகாயத்துடன் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.
இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த தீபனை பிடித்து விசாரித்த போது அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதாவது காதலர்கள் இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.
அதன் பிறகு ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த தீபன் விக்னேஸ்வரியை டைல்ஸ் கல்லால் தாக்கி கொலை செய்துள்ளார். இதனை அடுத்து கொலையை மறைப்பதற்கு விபத்து நடந்தது போல நாடகமாடியது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.