தமிழகத்தில் நாளை முதல் வெளிமாநில பதிவெண்  கொண்ட ஆம்னி பேருந்துகள் இயங்காது என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. அதன் பிறகு தடையை மீறி இந்த ஆம்னி பேருந்துகள் இயங்கினால் அபராதம் விதிக்கப்படுவதோடு பேருந்துகளும் பறிமுதல் செய்யப்படும்.

இந்நிலையில் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் அந்த கோரிக்கையை போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் நிராகரித்துவிட்டார். மேலும் அரசின் புதிய உத்தரவால் நாளை முதல் வெளி மாநில ஆம்னி பேருந்துகள் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.