சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் நாளை முதல் மாற இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் வரையிலான காலாண்டில்  வட்டி விகிதத்தில் மத்திய அரசு எந்த மாற்றமும் மேற்கொள்ளவில்லை. நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டுக்கு அறிவிக்கப்பட்ட வட்டி விகிதங்களே இரண்டாம் காலாண்டிற்கும் தொடரும் என்று நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.

முதலாம் ஆண்டு டெபாசிட் – 6.9%

2ம் ஆண்டு டெபாசிட் – 7%

3ம் ஆண்டு டெபாசிட் – 7.1%

5ம் ஆண்டு டெபாசிட் – 7.5%

5 ஆண்டுகள் தொடர் வைப்பு நிதி(RD) – 6.7%

மாதாந்திர வருமானத் திட்டம் – 7.4%

பொது வருங்கால வைப்பு நிதி திட்டம்(PPF) – 7.1%

கிசான் விகாஸ் பத்ரா – 7.5% (115 மாதங்களில் முதிர்ச்சியைடையும் திட்டங்களுக்கு)

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் – 8.2%

செல்வமகள் சேமிப்பு திட்டம் – 8.2%