தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் விட்டல எல்லப்பா.  40 வயதான இவர் ஆடு மேய்க்கும் தொழிலாளி. இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று இரவில் ரயில் விபத்து ஒன்று ஏற்பட்டது. இதில் சிக்கியவர்களை அடையாளம் காணும் பணி நடந்ததில் விபத்தில் உயிரிழந்த ஒருவரின் உடல் பக்கத்தில் செல்போன் ஒன்று கிடைத்துள்ளது. இது ஆய்வு செய்ததில் அது எல்லப்பாவின் செல்போன் என்று உறுதி செய்யப்பட்டதால் அவருடைய உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் எல்லப்பாவின் மனைவி அவருடைய குடும்பத்தினர் சடலத்தை பார்த்து கதறி அழுதனர்.

அதன்பிறகு இறுதி சடங்கிற்கான பணிகள் தொடங்கியது. வீடு முழுவதும் உறவினர்கள் இறுதிச்சடங்கிற்கு தயாராக இருந்தபோது  அனைவரும் எதிர்பாராத விதமாக ஆட்டோ ஒன்று வந்து நின்றுள்ளது. அதிலிருந்து எல்லப்பா நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இறங்கி வெளியே வந்துள்ளார் . அவரைப் பார்த்ததும் குடும்பத்தினர் அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் அடைந்தார்கள். உடனடியாக இறுதி சடங்கை நிறுத்தினார்கள். இதனையடுத்து நடந்த விசாரணையில் அடையாளம் காண்பதில் ஏற்பட்ட தவறால் தலை இல்லாத உடலால் இந்த குழப்பம் ஏற்பட்டு விட்டது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விஷயத்தில் நடந்தது என்னவென்றால், எல்லப்பாவினுடைய செல்போன் கடந்த வெள்ளிக்கிழமை அன்று திருடுபோய் உள்ளது .அதை திருடியவர் விபத்தில் சிக்கிய ரயிலில் பயணித்து உள்ளார். எல்லப்பா கடந்த மூன்று நாட்களாக வேறு இடத்தில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார்.  உண்மையில் இதில் உயிரிழந்தது எல்லப்பாவின் செல்போனை திருடிய நபர் என்றும் அடையாளம் காண்பதில் ஏற்பட்ட தவறால் இந்த சம்பவம் நடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.