
கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த முன்னாள் நிர்வாகி சிவராமன் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். அதாவது தனியார் பள்ளியில் போலியாக என்சிசி முகாம் நடத்தி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததோடு பல மாணவிகளுக்கு பாலியல் தொல்லையும் கொடுத்த குற்றத்திற்காக சிவராமன் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் சிவராமன் காவல்துறையினர் விசாரணை நடத்துவதற்கு முன்பாகவே ஒரு பிரச்சனையில் எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்திருந்த நிலையில் அதற்காக மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்றிருந்தார். அதன் பின் கடந்த ஜூலை 9ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து அவர் வீடு திரும்பினார். இந்நிலையில் நா.த.க. முன்னாள் நிர்வாகி சிவராமன் உயிரிழப்பு பற்றி தவறான செய்தி பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது