
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் பிரேம்ஜி. இவர் தமிழ் சினிமாவில் பன்முகத்திறமை கொண்ட கங்கை அமரனின் இளைய மகன் ஆவார். இவருடைய திருமணம் இன்று திருத்தணி முருகன் கோவிலில் நடைபெறும் நிலையில் நேற்று அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த திருமண விழாவில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
இந்நிலையில் மணமகள் மீடியாவைச் சேர்ந்தவரா அல்லது வேறு யாராவது என்று எதிர்பார்ப்பு பலரது மத்தியிலும் நிலவிய நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு திருமணம் முடிந்த பிறகு மணமகள் மற்றும் மணமகன் புகைப்படத்தை நானே வெளியிடுகிறேன் என்று கூறியிருந்தார். அதன்படி தற்போது நடிகர் பிரேம்ஜி மற்றும் மணமகள் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். மேலும் நடிகர் பிரேம்ஜி மற்றும் இந்து தம்பதியினருக்கு தற்போது பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.