
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஒரு வேன் சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் டயர் வெடித்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் தாறுமாறாக ஓடி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் பயணித்த 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த 20 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் நிச்சயதார்த்த விழாவிற்கு மேல் சென்றபோது டயர் வெடித்து வேன் விபத்தில் சிக்கியது உறுதியானது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.