பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் இன்று அனைத்து மாநில முதலமைச்சர் பங்கேற்கும் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தை இந்தியா கூட்டணி முதல்வர்கள் புறக்கணித்த நிலையில் மேற்குவங்க மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி மட்டும் கலந்து கொண்டார். ஆனால் திடீரென அவர் கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்துவிட்டார்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய பட்ஜெட்டில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது. அதன் பிறகு மத்திய பட்ஜெட் குறித்து என்னுடைய எதிர்ப்பினை பதிவு செய்ய எனக்கு 5 நிமிடம் கூட பேசுவதற்கு வாய்ப்பு தரவில்லை. மத்திய அரசின் பாரபட்சத்தை எப்போதும் பொறுத்துக் கொள்ள முடியாது. மேலும் இந்த பட்ஜெட் அரசியல் ரீதியாக தயாரிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.