
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த நித்தியானந்தா கர்நாடகாவிற்கு சென்று தனக்கென ஒரு தனி ஆசிரமத்தை தொடங்கி மிகப்பெரிய சீடர் கூட்டத்தை கூட்டினார். இவர் மீது பல பெண்கள் பாலியல் புகார் கொடுத்த நிலையில் அவர் செய்த லீலைகள் அனைத்தும் அம்பலமானது. குறிப்பாக நடிகை ஒருவருடன் இருக்கும் அந்தரங்க வீடியோக்களும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவர் ஒரு தேடப்படும் குற்றவாளியாக இருக்கிறார். இந்தியாவில் இருந்து தப்பி ஓடி அவர் கைலாசா என்ற ஒரு தனி நாட்டை உருவாக்கி அங்கு தன் சீடர்களுடன் வசித்து வருகிறார். அவ்வப்போது கைலாசாவிலிருந்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் நித்தியானந்தாவின் சகோதரி மகன் சுந்தரேஸ்வரன் தற்போது நித்தியானந்தா உயிரிழந்து விட்டதாக வீடியோ வெளியிட்டுள்ளார். அதாவது இந்து தர்மத்தை காப்பதற்காக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக உயிர் தியாகம் செய்துவிட்டதாக அவர் கூறியுள்ளார். இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை. ஒருவேளை வழக்குகளில் இருந்து தப்பிக்க நித்தியானந்தா இப்படி செய்துள்ளாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்படுகிறது.