நாடாளுமன்றத்தில் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள மாநிலங்களுக்கு மட்டும்தான் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளது. அந்த வகையில் பாஜக கட்சியின் மூத்த நிர்வாகியான சுப்பிரமணியன் சுவாமி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கடுமையாக விமர்சித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் பட்ஜெட் தாக்கல் செய்வதில் நிதி அமைச்சரை குறை சொல்வதில் தவறு இல்லை.

இந்த பட்ஜெட் பிரதமர் அலுவலகத்தால் தயாரிக்கப்பட்டது. ஆனால் அந்த முட்டாள்கள் ஒரு அடையாளத்திற்காக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அதனை கொடுத்துள்ளனர். அவர் ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் அவர். அவருக்கு ஆடவும் பாடவும் மட்டும்தான் தெரியும் என்று பதிவிட்டுள்ளார். மேலும் எதிர்க்கட்சிகள் பட்ஜெட் பற்றி விமர்சித்து வருவது ஒரு பக்கம் இருக்க பாஜக கட்சியை சேர்ந்தவரே அதனை விமர்சித்துள்ளது பேசும் பொருளாக மாறியுள்ளது.