
மத்திய பிரதேஷ் மாநிலம் இந்தூரில் 34 வயது பெண் ஒருவரை கடந்த ஜூன் மாதம் ஒரு கும்பல் குடோன் ஒன்றிற்கு இழுத்துச் சென்று நிர்வாணமாக்கி பெல்டால் கடுமையாக தாக்கி நடனமாட செய்துள்ளனர். அதோடு அந்தப் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இது குறித்து கடந்த ஜூலை மாதம் அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கு மீதான விசாரணை ஆகஸ்ட் 14 அன்று நீதிமன்றத்திற்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் 90 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என காவல் துறையினருக்கு உத்தரவிட்டனர்.
இந்த சம்பவம் அம்மாநிலத்தையே அதிர்ச்சடையை செய்த நிலையில் பெண் கொடுத்த புகாரில் காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்காமல் தடுத்தது. பாஜக தான் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.