பாகிஸ்தான் நாட்டில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா என்ற நகர் உள்ளது. இங்கு தனியாருக்கு சொந்தமான நிலக்கரி சுரங்கம் ஒன்று செயல்படுகிறது. இந்த சுரங்கத்தில் வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென விஷவாயு கசிந்தது.

அதாவது சுமார் 1500 அடி ஆழத்தில் தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென விஷவாயு பரவியது. இதனால் தொழிலாளர்கள் ஒன்றன்பின் ஒன்றாக மயங்கி விழுந்தனர். இது குறித்த தகவலின் பேரில் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று சுரங்கத்தில் சிக்கியிருந்த 11 பேரை மீட்டனர். அவர்களை மருத்துவர்கள் பரிசோதித்த நிலையில் 11 பேரும் மூச்சு திணறி இறந்து விட்டதாக கூறிவிட்டனர். மேலும் இந்த சம்பவத்தை தொடர்ந்து சுரங்கத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.