
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. நிலச்சரிப்பில் சிக்கி இதுவரை 182 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மூன்றாவது நாளாக மீட்பு பணி தொடர்கிறது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இரண்டு நாட்களில் 1592 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. உயிரிழந்த 96 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் 166 பேரின் உடல்களுக்கு உடற்கூறு ஆய்வு முடிந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
நாட்டின் பல இடங்களிலும் நிலச்சரிவு ஏற்பட்டு பல உயிரிழப்புகள் ஏற்படும் நிலையில் அதனை தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மண்ணரிப்புக்கு காரணமாக இருக்கும் ஒற்றைப் பயிர் மற்றும் தோட்டக்கலை பயிர் சாகுபடிகளை கைவிட வேண்டும்.
காலாவதியான அணைகள் மற்றும் அனல்மின் நிலையங்களை மூட வேண்டும்.
காட்டு நிலங்களை வேறு பயன்பாட்டுக்கு மாற்றுதல் நதிகளின் போக்கை திசை திருப்புதல் கூடாது.
அகழ்விடங்கள், சுரங்கங்கள், அனல் மின் நிலையங்களை மேற்கு தொடர்ச்சி மலைக்குள் அனுமதிக்க கூடாது
மலைத்தொடரில் வாழும் பழங்குடி மக்களையும் உட்படுத்தி, அவர்களின் ஆலோசனைகளுடன் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்