தமிழகத்தில் நிலம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஒவ்வொரு மாதமும் தனி ஆய்வு கூட்டம் நடத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக பேசிய முதல்வர் ஸ்டாலின், ஏழை எளிய மக்களுடன் நேரடி தொடர்பில் இருக்க வேண்டும். அரசின் திட்டங்களின் பலன்கள் அனைத்தும் மக்களை சென்றடைந்துள்ளதா என்பதை நேரடியாக கண்காணிக்க வேண்டும்.

பல மாவட்டங்களிலும் நிலம் தொடர்பான பிரச்சனைகள் உள்ளதால் அது சில நேரங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக மாறிவிடுகின்றன. எனவே நில அளவைத் துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறை மற்றும் காவல் துறை ஆகியவற்றை ஒருங்கிணைத்து மாதம் தோறும் நிலம் தொடர்பான பிரச்சனைக்கு தனி ஆய்வு கூட்டம் நடத்த வேண்டும் என்ற முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்