இந்தியாவின் வரலாற்று வெற்றியை ‘சந்திரயான் 3’ பதிவு செய்திருக்கிறது. விக்ரம் லேண்டர், ரோவர் பிரக்யானை சுமந்து, சந்திரனின் தென் துருவத்தில் மெதுவாக தரையிறங்கி புதிய சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், நிலவின் மேற்பரப்பில் உள்ள வெப்பநிலையை ‘சந்திரயான் 3’ விக்ரம் லேண்டர் ஆய்வு செய்வதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.

நிலவின் மேற்பரப்பில் இருந்து 10 செமீ ஆழத்தில் லேண்டரின் 10 சென்சார் கருவிகள் மூலம் வெப்பநிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ChaSTE கருவியானது, நிலவின் மேற்பரப்பின் வெப்பநிலை மாறுதலை அளவிடும் தன்மை கொண்டது. இதுகுறித்த புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.