அமெரிக்காவைச் சேர்ந்தவர் வில்லியம் ஆண்டர்ஸ் (90). இவர் ஒரு பிரபல விண்வெளி வீரர். அதாவது அப்பல்லோ 8 விண்கலத்தில் நிலவை சுற்றி வந்த 3 விண்வெளி வீரர்களில் இவரும் ஒருவர்.

இவர் அப்பல்லோ 8 மின்கலத்தில் சென்றபோது எர்த்ரைஸ் புகைப்படத்தை எடுத்தார். இந்நிலையில் வில்லியம் தனக்கு சொந்தமான ஒரு சிறிய ரக விமானத்தை ஓட்டிக்கொண்டு வாஷிங்டனில் இருந்து கிளம்பினார். அப்போது இந்த விமானம் ஜோன்ஸ் தீவில் கடலில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் வில்லியம் பரிதாபமாக இறந்தார். மேலும் அவரின் உடலை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.