
கர்நாடக மாநிலத்தின் முதல்வராக இருப்பவர் சித்தராமையா. இவர் மைசூர் நகர்புற வளர்ச்சி அமைப்பின் நில மோசடி தொடர்பான வழக்கில் சிக்கிய நிலையில் அவர் மீது விசாரணை நடைபெற்று வந்தது. அதாவது 14 வீட்டு மனைகளை சித்தராமையா அவருடைய மனைவியின் பெயரில் வாங்கியதாக பாஜக குற்றம் சாட்டியது. அதாவது சித்தராமையாவின் மனைவி பார்வதி. இவருக்கு சொந்தமான 3.16 ஏக்கர் நிலம் வளர்ச்சியடையாத பகுதியில் இருப்பதால் அதற்கு பதிலாக வளர்ச்சி அடைந்த நகர்ப்புற பகுதியில் 38,284 சதுர அடி நிலத்தை வாங்கினார்கள் என்று புகார் எழுந்தது.
இதன் காரணமாக அரசுக்கு 4 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக லோக் ஆயுக்தா விசாரணை நடத்தி வந்த நிலையில் அமலாக்கத் துறையும் விசாரணை நடத்தி வந்தது. இது தொடர்பான வழக்கு லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மேலும் அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் முறையான ஆதாரங்கள் இல்லாததால் இந்த வழக்கில் இருந்து சித்தராமையா மற்றும் அவருடைய மனைவியை விடுதலை செய்வதாக தீர்ப்பு வழங்கியுள்ளது.