
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் நகராட்சியில் சண்முகம் என்பவர் பில் கலெக்டராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் திருநின்றவூர் நகராட்சியில் வீட்டு வரியை நிர்ணயிக்க 15 ஆயிரம் ரூபாய் சண்முகம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக ஓய்வு பெற்ற மின்சார துறை அதிகாரியான மாயாண்டி என்பவர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் அறிவுரைப்படி மாயாண்டி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சண்முகத்திடம் கொடுத்துள்ளார். அப்போ அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் சண்முகத்தை கையும் களவுமாக பிடித்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சண்முகத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.