
ஈரோடு மாவட்டம் கோபி நகராட்சி அலுவலகம் நகரமைப்பு பிரிவில் சுப்பிரமணியம்(45) என்பவர் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கோபி பகுதியைச் சேர்ந்த கட்டுமான பொறியாளரான வருண் என்பவர் தான் புதிதாக கட்டடம் கட்டுவதற்கு அனுமதி பெற வேண்டும் என சுப்பிரமணியத்தை சந்தித்து அவரிடம் பேசியுள்ளார். அப்போது சுப்பிரமணியம் 40 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதனையாடுத்து பேச்சுவார்த்தைக்குப் பின் 30,000 கொடுக்க வருண் ஒப்புக் கொண்டார்.
பின்னர் லஞ்சம் கொடுக்க விரும்பாத வருண் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரையின்படி வருண் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சுப்பிரமணியத்திடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சுப்பிரமணியத்தை கையும் களவுமாக கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.