பஞ்சாப் மாநிலத்தை போதை பொருள் இல்லாத மாநிலமாக மூன்று மாத காலத்திற்குள் மாற்ற போவதாக முதல் மந்திரி பகவந்த் மான் கூறியுள்ளார். அதனால் பஞ்சாப் மாநிலம் முழுவதுமாக போதை பொருள் தடுப்பு படையினர் சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை பதிந்தாவில் உள்ள மேம்பாலம் அருகில் பெண் காவலர் அமென் தீப் கௌரின் சென்று கொண்டிருந்தார்.

இவர் பதிந்தா காவல் எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் அவரது வாகனத்தை போலீசார் சோதனை செய்தனர். அவரிடம் 17.70 கிராம் ஹெராயின் என்ற போதை பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை போலீசார் உடனடியாக பறிமுதல் செய்தனர். மேலும் போதை பொருள் கடத்தல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அமென் தீப் கௌரினை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.