
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் ஆன்லைன் ஷாப்பிங் மோகம் என்பது அதிகரித்துவிட்டது. எந்த பொருளையும் கடைக்கு சென்று வாங்காமல் வீட்டில் இருந்தவாறு போன் மூலமாக ஆர்டர் செய்து விடுகின்றனர். இது ஒரு பக்கம் மக்களுக்கு சாதகமாக இருந்தாலும் மறுபக்கம் மோசடிகளும் அரங்கேறுகின்றன. இந்த நிலையில் ஆன்லைன் ஷாப்பிங்கில் சிக்கி ஏமாறாமல் இருக்க நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
அதாவது நீங்கள் ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் இணையதள முகவரி http என்று தொடங்குகிறதா, வாடிக்கையாளர்களின் ரிவியூ எப்படி உள்ளது என்று பரிசோதிக்க வேண்டும். அப்படி இதனை கவனிக்காமல் ஆர்டர் செய்யும் போது உங்களுடைய கடவுச்சொல் மற்றும் வங்கி கணக்கு, உங்கள் பணத்தை இழக்க நேரிடலாம். எனவே இனி ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும்போது கவனமாக இருங்கள்.