தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் தந்தை சினிமாவில் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் பணியாற்றி வந்தார். தந்தை போல தாயும் சினிமாவில் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். விஜய்யோடு இணைந்து ஆரம்ப காலகட்டத்தில் பல பாடல்கள் இவர் பாடி வந்தார். இந்த நிலையில் விஜய் அம்மா ஷோபா காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு சமீபத்தில் சென்றிருந்தார்.

அப்பொழுது அவரைப் பின் தொடர்ந்து வந்த பத்திரிக்கையாளரை பார்த்து, நீங்க வரக்கூடாது… நீங்க வரக்கூடாது என்று கத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இது விஜய் ரசிகர்களுக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து பேட்டி கொடுத்த விஜயின் தந்தை, அவருடைய மனைவியின் சினிமா வாழ்க்கை பற்றியும் விஜயின் அரசியல் வாழ்க்கை பற்றியும் பேசி இருக்கிறார். இந்த செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.