சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை அணி முதல் முறையாக 103 ரன்கள் எடுத்தது. 18 வருட ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக சென்னை அணி மிக குறைந்த ரன்கள் எடுத்த நிலையில் தொடர்ச்சியாக 5 தோல்விகளை சந்தித்துள்ளது. நேற்று கொல்கத்தா அணி 106 ரன்கள் எடுத்து சிஎஸ்கேவை எளிதாக வீழ்த்தியது. இந்த போட்டிக்கு பிறகு ரசிகர்கள் சிஎஸ்கேவை கடுமையாக விமர்சிக்க தொடங்கிவிட்டனர். இதுவரை விளையாடிய ஒரு போட்டியில் மட்டுமே சிஎஸ்கே வென்ற நிலையில் அதற்கு அடுத்த அனைத்து போட்டிகளிலும் தோல்விதான்.

நடப்பு ஐபிஎல் சீசனில் தொடர்ந்து சிஎஸ்கே பேட்டிங்கில் சொதப்பி வருகிறது. இது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் தோனியை பலரும் விமர்சித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் விஷ்ணு விஷால் தோனி மற்றும் சிஎஸ்கே அணியை மறைமுகமாக விமர்சித்து ஒரு எக்ஸ் பதிவை போட்டுள்ளார். அந்த பதிவில் நானும் ஒரு கிரிக்கெட்டர் என்பதால் இதைப்பற்றி பேச வேண்டாம் பேச வேண்டாம் என்றுதான் இருந்தேன். ஆனால் என்னால் முடியவில்லை. இதைப் பற்றி மிக சீக்கிரம் முடிவுக்கு வர வேண்டாம் என்று நினைத்த நிலையில் இது மிகவும் கோரமாக இருக்கிறது.

ஏன் இவ்வளவு கீழ் வரிசையில் இறங்க வேண்டும். எந்த ஒரு விளையாட்டும் வெற்றி பெறுவதற்காக விளையாடப்படுவது கிடையாதா.? இது இப்போது ஒரு சர்க்கஸை பார்ப்பது போல் இருக்கிறது. எந்த ஒரு தனி நபரும் விளையாட்டை விட பெரியவர் கிடையாது என்று தோனியை கடுமையாக சாடியுள்ளார். மேலும் ஏற்கனவே ரசிகர்களும் எம்.எஸ். தோனியை விமர்சித்து வரும் நிலையில் தற்போது நடிகர் விஷ்ணு விஷாலும் அவரை விமர்சித்து  பதிவு போட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.