பெங்களூருவில் ஆட்டு இறைச்சி எனக்கூறி நாய் இறைச்சியை சப்ளை செய்து வந்த புகாரை தொடர்ந்து அந்த நபரிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை செய்தனர். போலீசாரின் விசாரணையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து பெங்களூருக்கு ரயில் மூலம் 3000 கிலோ நாய் இறைச்சி கொண்டுவரப்பட்டதாக அங்குள்ள மக்கள் புகார் கூறிவந்தனர்.

இந்நிலையில் ரயிலில் கொண்டுவரப்பட்ட 3000 கிலோ நாய் இறைச்சி என்று கூறப்பட்ட இறைச்சியை   ரயில்வே காவல்துறையினர் கைப்பற்றியதோடு , இறைச்சியை வழங்கி வந்த அப்துல் என்பவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இது குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததில் பார்சலில் வந்தது ஆட்டிறைச்சிதான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான், குஜராத்தின் கட்ச்-புஜ் பகுதிகளில் வளர்க்கப்படும் சிரோஹி வகை ஆடுகளின் இறைச்சி இது அபார்ப்பதற்கு நாய் இறைச்சி போல் இருப்பதால் இந்த குழப்பம் அடிக்கடி ஏற்படுகிறது. கர்நாடகாவில் ஆட்டிறைச்சிக்கு தட்டுப்பாடு இருப்பதால் வெளிமாநிலங்களிலிருந்து சிரோஹி வகை ஆட்டு இறைச்சியை இங்குள்ள வியாபாரிகள் மலிவுவிலைக்கு வாங்கி விற்பனை செய்கின்றனர். பெங்களூருவில் நாய் இறைச்சி விற்கப்படுவதில்லை.