
தமிழ் சினிமாவில் குழந்தைகளுக்கு பிடித்தமான ஹீரோ என்றால் சிவகார்த்திகேயன் பெயர்தான் பலருக்கும் நினைவுக்கு வரும். அந்த வகையில் சின்னத்திரையில் தன் கேரியரை தொடங்கிய சிவகார்த்திகேயன் தற்போது வெள்ளி திரையில் முன்னணி ஹீரோவாக ஜொலிக்கிறார். இவர் நடித்த பல படங்கள் குடும்பங்களை கவரும் வகையிலும் குழந்தைகளை கவரும் வகையிலும் இருக்கிறது. இந்நிலையில் நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்துள்ள தி கோட் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். அவர் வரும் காட்சிகள் தியேட்டரை அதிர வைத்தது. படத்தில் சிவகார்த்திகேயன் நீங்க இதைவிட வேறு ஏதோ முக்கியமான வேலைக்காக செல்கிறீர்கள்.
நீங்க அதை பார்த்துக்கோங்க. நான் இதைப் பார்த்துகிறேன் என்று கூறுகிறார். இந்த காட்சிகள் ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைத்தது. இந்நிலையில் நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சி ஆரம்பித்த நிலையில் இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டும் தான் நடிக்க இருக்கிறார். அதன்பிறகு சினிமாவை விட்டு விலகும் விஜய் முழு நேர அரசியலில் ஈடுபடுகிறார். மேலும் இதன் காரணமாக தான் விஜயின் இடத்தை சினிமாவில் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சிவகார்த்திகேயன் கூறுவது போல் படத்தில் வசனம் அமைந்துள்ளது. குறிப்பாக விஜய் சினிமாவில் அவருடைய இடத்தை சிவகார்த்திகேயனிடம் ஒப்படைப்பது போல் காட்சிகள் இருப்பதாக பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.