நாடாளுமன்ற தேர்தல் நேற்று (ஏப்ரல் 19) தமிழ்நாட்டில் சிறப்பாக நடந்து முடிந்தது. இந்நிலையில், நேற்று மாலை 6 மணியளவில் பெரும்பாலானோர் செல்போனுக்கு வந்த அழைப்பில், ‘நீங்கள் எந்த வேட்பாளருக்கு வாக்களித்தீர்கள்?’ என கேள்வி கேட்கப்பட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த மக்கள் இது குறித்து தேர்தல் ஆணைய அலுவலரிடம் கேட்டனர்.

அதற்கு, “தேர்தல் ஆணையம் இதுபோன்ற கேள்விகள் கேட்காது, வேறு யாரோ தனியார் நிறுவனம் இதுபோன்ற செயல்களில் ஈடுபடலாம். புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.