இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18 வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற 39-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா மற்றும் குஜராத் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் போடும்போது கொல்கத்தா அணியின் கேப்டன் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். அப்போது பேசிய குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் இன்றைய ஆட்டத்தில் பனிப்பொழிவு இருக்காது. இன்றைய தினம் நடைபெறும் போட்டி ஒரு நல்ல ஆட்டமாக இருக்கும் என நினைக்கிறேன் என்றார்.

 

அப்போது அவரிடம் கிரிக்கெட் வர்ணனையாளர் டேனியல் மோர்சன் திருமணம் குறித்து கேள்வி கேட்டார். அதாவது நீங்க பார்க்க அழகா இருக்கீங்க. திருமணம் குறித்து ஏதேனும் திட்டம் இருக்கிறதா என்றார். அந்தக் கேள்வியை கேட்டவுடன் கில் உடனே வெட்கத்தில் சிவந்தார். பின்னர் சிரித்துக் கொண்டே அப்படி எதுவும் இல்லை என்றார். மேலும் கில் வெட்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.