இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான ரத்தன் டாடா வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவினால் சமீபத்தில் காலமானார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் ரத்தன் டாடாவின் சொத்துக்கள் யாருக்கு செல்லும் என்று எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் தற்போது அவர் சொத்துக்களை உயில் எழுதி வைத்தது குறித்த செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி அவர் தன்னுடைய 10,000 கோடி சொத்தில் நாய்க்குட்டிக்கும் பங்கு எழுதி வைத்துள்ளார். ரத்தன் டாடா இறுதிச் சடங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அந்த இடத்தை விட்டு அவருடைய வளர்ப்பு நாய் டிட்டோ நகரவே இல்லை. அவ்வளவு அன்பை காட்டிய அந்த நாய்க்கும் ரத்தன் டாடா சொத்து எழுதி வைத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஜெர்மன் ஷெப்பர்ட் நாயை பராமரிக்குமாறு ‌ அவருடைய வீட்டு சமையல்காரரான ராஜன் சாஷாவிடன் ரத்தன் டாடா ஒப்படைத்துள்ளார். இதன் மூலம் அந்த நாயின் வாழ்நாள் முழுவதும் அதனை பராமரிக்க செலவு செய்யப்படும். இதேபோன்று அவரிடன் நீண்ட நாட்கள் பணி புரிந்த ராஜன் பட்லர் என்பவருக்கும் அவர் சொத்து எழுதி வைத்துள்ளார். இவர் 30 வருடங்களுக்கும் மேலாக பணியாற்றிய நிலையில் அவருக்கும் சொத்தில் பங்கு கொடுத்துள்ளார். மேலும் அதன்படி அவருடைய பத்தாயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்கள் சகோதரர்கள், சகோதரிகள், அவருடைய அறக்கட்டளை, வீட்டு பணியாளர்கள் மற்றும் பிறருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.