இந்தியாவில் ஜியோ நிறுவனத்தின் மொபைல் ரீசார்ஜ் கட்டணம் அதிரடியாக உயர்ந்தது. மேலும் ஏர்டெல் நிறுவனமும் அதன் பிரீபெய்ட் திட்டத்திற்கான கட்டணங்களை உயர்த்தியது. இந்த நிலையில் ஏர்டெல் நிறுவனம் இரண்டு புதிய திட்டங்களை கொண்டு வந்துள்ளது.
ஏர்டெல் 3599 பிரீபெய்ட் திட்டம்:
இந்த திட்டத்தின் மூலம் மொத்தம் 730GP டேட்டா வீதம் தினமும் 2 GP டேட்டா ,அன்லிமிடெட் ப்ரீபெய்ட் கால்ஸ், 100 எஸ்எம்எஸ் அனுப்பும் வசதிகளை பெற முடியும். இதன் வேலிடிட்டி 365 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஏர்டெல் 3999 பிரீபெய்ட் திட்டம்:
இந்த திட்டத்தின் மூலம் ஒரு வருடத்திற்கான டிஸ்னி மற்றும் ஹாட்ஸ்டார் சந்தாவை பெறலாம். அது மட்டும் இல்லாமல் தினமும் 2.5 GP டேட்டா, 365 நாட்கள் வேலிடிட்டி, OTT நன்மைகளுடன் கூடிய அதிக டேட்டா மற்றும் அதிக வேலிடிட்டி நாட்கள் இருப்பதால் இந்த திட்டத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.