
ராஜஸ்தானை சேர்ந்த பகிஷா என்ற 18 வயது மாணவி கோட்டாவில் உள்ள பயிற்சி மையத்தில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தார். அதே பகுதியில் தன்னுடைய அம்மா மற்றும் தம்பியுடன் அடுக்குமாடி குடியிருப்பில் பீடி எடுத்து தங்கியவாறு பயிற்சி மையத்திற்கு சென்று வந்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த நீட் தேர்வில் அவர் கலந்து கொண்டு தேர்வு எழுதிய நிலையில் நேற்று முன்தினம் தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் இவர் குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இருந்தாலும் தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கி தருவதாக அவரது தந்தை கூறிய நிலையில் கடந்த இரண்டு நாட்களாக சோகமாக இருந்து வந்த மாணவி யாரும் எதிர்பாராத வகையில் அடுக்குமாடி குடியிருப்பின் ஒன்பதாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.