குஜராத் ‌ மாநிலத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் நீட் தேர்வு எழுதியுள்ளார். இந்த தேர்வில் அந்த மாணவி 720-க்கு 705 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். ஆனால் இந்த மாணவி கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பொது தேர்வில் வேதியியல் மற்றும் இயற்பியல் உள்ளிட்ட இரு பாடங்களில் தோல்வியடைந்தார். இதைத்தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற துணை தேர்விலும் அவர் 2 தேர்வுகளிலும் தோல்வியடைந்துள்ளார். அந்த மாணவி துணை தேர்வில் எப்படியும் தேர்ச்சி பெற்று விடுவோம் என்ற நம்பிக்கையில் நீட் தேர்வு எழுதி அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

ஆனால் முக்கியமான பாடங்களான இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் கூட அந்த மாணவியால் தேர்ச்சி பெற முடியாத சூழலில் எப்படி நீட் தேர்வில் மட்டும் இவ்வளவு அதிகமான மதிப்பெண்கள் எடுக்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதன் காரணமாக அந்த மாணவி முறிக்கேடு செய்து தான் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க கூடும் என்று புகார்கள் எழுந்துள்ளது. மேலும் குஜராத் மாநிலத்தில் அதிக மதிப்பெண் பெற்று முதலிடத்தை பிடித்துள்ள இந்த மாணவி 12-ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்ததால் மருத்துவ படிப்பை தொடர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.