
சேலத்தில் பாஜக கட்சியின் சார்பில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நீட் தேர்வு விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம். இதில் ஏற்பட்ட குளறுபடி என்பது மிகச் சிறிய அளவிலானது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தி வரும் நிலையில் தேசிய தேர்வு முகமை நீட் தேர்வு மட்டும் இன்றி பல்வேறு விதமான முக்கிய தேர்வுகளை நடத்தி வருகிறது. கடந்த 10 வருடங்களில் நீட் தேர்வின் அடிப்படையில் தமிழகத்தில் எவ்வளவு அரசு பள்ளி மாணவ மாணவிகள் பயனடைந்துள்ளனர் என்பது குறித்து திமுக அரசு கூற வேண்டும். இது தொடர்பான வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். மேலும் நீட் தேர்வினால் எத்தனை பேருக்கு மருத்துவ படிப்பில் சேர்ந்து படிக்க வாய்ப்பு கிடைத்தது என்பதையும் தெளிவாக கூற வேண்டும் என்று கூறினார்..