
நாடு முழுவதும் கடந்த மே மாதம் நீட் தேர்வு நடைபெற்ற நிலையில் அதில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. அதாவது நீட் வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்த நிலையில் இது தொடர்பாக டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு மறு தேர்வு நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு ஏற்கனவே டெல்லி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் வினாத்தாள் கசிவுக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதைத்தொடர்ந்து இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி நீட் மறு தேர்வு நடத்த உத்தரவிட முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். அதாவது ஒட்டுமொத்த தேர்வு முறையும் பாதிப்படைந்து விட்டதாக உறுதியானால் மட்டுமே மறுத்தேர்வு நடத்த உத்தரவிடப்படும் என்று கூறினார். மேலும் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக மனு கொடுத்தவர்கள் ஒட்டுமொத்தமாக நாங்கள் மறுத்தேர்வு நடத்த வேண்டும் என்று கூறவில்லை எனவும் தேர்வில் வெற்றி பெற்ற சுமார் 1,08,000 மாணவர்களுக்கு மட்டும் மீண்டும் தேர்வு நடத்தினால் போதும் என்று கூறினார்.