பீகார் மாநிலத்தில் நீட் தேர்வு முறைகேட்டில் 4 மாணவர்கள் மற்றும் 13 பெற்றோர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், தேர்வுக்கு முன்தினம் விடைத்தாள் மற்றும் விடைகள் வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதற்காக ஒவ்வொரு மாணவரிடம் இருந்தும் தலா 30 லட்சம் ரூபாய் வரை பெறப்பட்டதும் தெரிய வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 6 காசோலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் அவர்களுடைய அறையில் பாதி எரிந்த நிலையில் வினாத்தாள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த தீவிர விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.