
நாடு முழுவதும் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் பீகார், குஜராத், ஜார்கண்ட் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் ஒரு பள்ளியின் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் கூட கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலையிடம் நிரூபர்கள் கேள்வி எழுப்பினர். அவர் கூறியதாவது, நீட் வினாத்தாள் கசிவுத் தொடர்பாக மெட்ராஸ் ஐஐடி ஆய்வு நடத்தியது. அதன்பிறகு வினாத்தாள் கசிந்தது சிலருக்கு மட்டும் தான் கிடைத்துள்ளது. உச்சநீதிமன்றம் கூட வினாத்தாள் கசிவு பரவலாக நடைபெறவில்லை என கூறியுள்ளது. எனவே மிகச் சிறிய அளவில்தான் நீட் வினாத்தாள் கசிவு நடந்துள்ளது என்று கூறினார்.