
பிரபல விஜய் தொலைக்காட்சியில் வெளியாகும் நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் பேய் இருக்கிறது என்று நம்பும் மனிதர்கள்… பேய் நம்பிக்கை இல்லாதவர்கள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சியை ஆரம்பத்திலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த ப்ரோமோ காட்சிகள் வெளியாகி தற்போது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வாரம் எடுத்துக்கொண்ட தலைப்பில், நபர் ஒருவர் கையில் மணியை அடித்துவிட்டு இறந்தவரை அழைக்கிறார். இறந்தவர் அரங்கத்திற்கு வந்தபோது மணி தானாக அசைவதை பார்க்க முடிகிறது.