முன்னாள் இந்திய ஓப்பனிங் வீரர் ஷிகர் தவான் 2023 அக்டோபரில் தனது மனைவி ஐஷா முகர்ஜியுடன் விவாகரத்து பெற்றார். தன் மகன் ஜோராவரை கவனிக்கும் வாய்ப்பை இழந்துவிட்டார். காணொளி அழைப்புகள் மூலம் மட்டுமே சந்திக்கலாம் என நீதிமன்றம் அனுமதித்துள்ள போதிலும், அவர் தனது மகனுடன் தொடர்புகொள்ள முடியவில்லை எனத் தவான் தெரிவித்தார். “என் மகனை பார்த்து இரண்டு வருடங்களாகிறது, பேசியும் ஒரு வருடம்தான் ஆகிறது. ஆனாலும், நான் அவனை ஆன்மீக ரீதியாக நினைத்துப் பேசுகிறேன், அன்பளிக்கிறேன்,” என்றும் கூறியிருந்தார்.

இதற்கிடையில் சாம்பியன்ஸ் டிரோபி 2025 தொடரின்போது,  ஷிகர் தவான் ஒரு பெண்னுடன் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலானது. பலர் அந்தப் பெண் யார் என்ற ஆர்வத்தில் இருந்த நிலையில், அவர் அயர்லாந்தைச் சேர்ந்த சோபி ஷைன் என தகவல்கள் வெளியானது. இந்நிலையில், சமீபத்தில் வெளிவந்த வீடியோ ஒன்றில் பேசிய ஷிகர் தவான்,”நான் பெயரைச் சொல்லமாட்டேன், ஆனால் இந்த அறையில் உள்ள மிக அழகான பெண் என் காதலிதான்” என கூறியுள்ளார். அப்போது அங்கிருந்த கேமரா சோபி ஷைனைப் போன்றே தோன்றும் ஒரு பெண்மணியை காட்டியுள்ளது.