இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகள் மற்றும் பறவைகள் குறித்த வீடியோக்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றன. இதற்கு ஏராளமான ரசிகர்களும் உண்டு. இன்றைய காலத்தில் மிருகங்கள் மனிதர்களின் தோழனாக பழக ஆரம்பித்து விட்டன. மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய விலங்குகள் கூட சாதாரணமாக வீட்டில் வளர்க்கப்படுகிறது. பொதுவாக மனிதர்கள் காலையில் எழுந்தவுடன் பல் துலக்குவது வழக்கம்தான்.

ஆனால் விலங்குகள் பல் துலக்குமா என்றால் அனைவரும் சிரிக்க தான் செய்வார்கள். தற்போது வெளியாகி உள்ள ஒரு வீடியோவில், நீரில் நீந்தி கொண்டிருக்கும் நீர்யானை நபரை பார்த்ததும் வாயை திறந்து கொண்டு அருகில் வந்துள்ளது. அந்த நபரும் அதற்கு பல்துலக்கி விட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.