மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இன்றும் பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  வங்க கடலில் வருகின்ற ஜூலை 19ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. முன்னதாக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அது ரெட் அலர்ட்டாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் 21 சென்டி மீட்டருக்கு மேல் மழை பொழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஊட்டி, கூடலூர், மஞ்சூர் மற்றும் தேவாலா பகுதிகளில் மீட்பு குழுவினர் முகாமிட்டுள்ளனர்.