
தெலுங்கானா மாநிலத்தில் எல்லப்பா (42) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக வேலை விஷயமாக வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அவர் வெளியே சென்று நிலையில் வீட்டிற்கு திரும்பவில்லை. இதற்கிடையில் எல்லப்பா ரயிலில் அடிபட்டு உயிரிழந்துவிட்டதாக குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது. அதாவது ரயிலில் அடிபட்டு இறந்தவரின் அருகே அவருடைய செல்போன் இருந்தது. இதை வைத்து எல்லப்பா இறந்து விட்டதாக நினைத்துள்ளனர். அதோடு உயிரிழந்தவரின் சடலமும் எல்லப்பா போன்ற இருந்துள்ளது. அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்கு பிறகு குடும்பத்தினர் வாங்கி வந்தனர். அவருக்கு இறுதிச்சடங்குகள் நடத்த குடும்பத்தினர் ஏற்பாடு செய்து வந்த நிலையில் அதில் கலந்து கொண்ட உறவினர் ஒருவர் வீட்டிற்கு கிளம்பியுள்ளார்.
அப்போது எல்லப்பாவை அவர் திடீரென சந்தித்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் நீ இன்னும் சாகலையா. இப்போது தானே உன்னுடைய இறுதி சடங்குக்கு நான் சென்று வருகிறேன் என்று கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த எல்லப்பா குடும்பத்தினருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தான் இன்னும் உயிருடன் தான் இருப்பதாக கூறினார். அதன் பிறகு அவர் காவல் நிலையத்திற்கு சென்று தன்னுடைய செல்போன் திருடு போய்விட்டதாகவும் தான் இன்னும் உயிருடன் தான் இருப்பதாகவும் கூறினார். மேலும் இதைத் தொடர்ந்து காவல்துறையினர் இறுதிச் சடங்குக்காக வைத்திருந்த உடலை அங்கிருந்து எடுத்துச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.