சமீபத்தில் உங்கள் இணைய டேட்டா மிச்சம் இருந்தால் அதை எங்களிடம் கொடுக்கும்போது அதற்கு பதில் நாங்கள் பணமாக தருகிறோம் என்ற ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து ஆராய்ந்து அறிந்த  டாப் இன்பார்மர் youtube சேனல் நடத்தக்கூடிய முதியவர் ஒருவர் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது. அதில்,  AI தொழில்நுட்பம் என்பது மிகப்பெரிய தொழில்நுட்பம் அந்த தொழில்நுட்பம் பயன்படுத்தக்கூடிய ஒரு நிறுவனத்திற்கு உங்களுடைய டேட்டா தேவைப்படுவதாக கூறி பொய்யான விளம்பரம் செய்து உங்களிடமிருந்து தகவல்களை பெற பார்க்கிறார்கள்.

அவ்வளவு பெரிய நிறுவனத்திடம் இன்டர்நெட் கூடவா இருக்காது? அவ்வளவு தகவல்களை சேகரிக்க முடியும் அவர்களால் எப்படி இன்டர்நெட்   இல்லாமல் தவிக்க முடியும். அதற்கு பின்னால் மிகப்பெரிய சூழ்ச்சி இருக்கிறது.  GET GROSS  என்னும் இணையதளம் உங்களது  மீதமுள்ள இன்டர்நெட் ஐ வாங்கிக்கொள்வதாக தவறான விளம்பரம் செய்கிறது. ஆனால் உண்மை என்னவெனில், AI தொழில்நுட்பத்திற்கு நம்மிடமிருந்து ஏராளமான தகவல் தேவைப்படுகிறது.

ஆனால் ஒரு IP Address யிலிருந்து குறிப்பிட்ட அளவு மட்டுமே தகவல்களை சேகரிக்க முடியும். அதற்கு மேல் சேகரிக்க முயன்றால் அந்த IP Address பிளாக் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் AI கம்பெனி நிறுவனங்கள் அனைத்தும் போதுமான இன்டர்நெட் வைத்திருக்கிறார்கள். ஆனால் அவர்களிடம் போதுமான IP Address கள் இல்லை. ஒவ்வொரு மொபைலுக்கும் தனித்தனி IP Address உண்டு. ஒவ்வொரு லேப்டாப்புக்கும் தனித்தனி  IP address உண்டு.

இப்படி தனித்தனியாக இருக்கும் பலரது ஐபி அட்ரஸ்கள் மூலமாக நம்முடைய தகவல்களை நம்மிடம் இருந்து நமது அனுமதியுடன் அவர்கள் பெற்று செல்வதே இந்த திட்டத்தின் நோக்கம். சரி எங்களது தகவல்களை கொடுப்பதன் மூலம் பணம் பெறலாம் தானே என்று நீங்கள் நினைத்தால், அதுவும் கிடையாது. அவர்கள் கொடுப்பது உண்மையான பணம் கிடையாது. கிரிப்டோ கரன்சி என்று கேள்விப்பட்டிருப்போம். இவர்கள் நாம் கொடுக்கும் இன்டர்நெட்களை அறிமுகமே படுத்தாத கிரிப்டோ கரன்சிகளாக தருவோம் என கூறி சில டோக்கன் களை தருகிறார்கள்.

உண்மையாகவே இவர்கள் அதை கிரிப்டோ கரன்சிகளாக அறிவித்தால் அது என்ன விலைக்கு அறிவிக்கப்படும் என்று நமக்கே தெரியாது. அறிமுகப்படுத்தாத கிரிப்டோ கரன்சியை நமக்குத் தந்ததால் இது கிட்டத்தட்ட ஒரு மோசடி வேலை தான் என்று கூறப்படுகிறது.

இது குறித்து விரிவாக அந்த முதியவர் பேசக்கூடிய வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதே போல பிரபல youtuber A2D உம் இது குறித்து வீடியோ பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Post by @zabiullah278
View on Threads